text stringlengths 0 4.01k |
|---|
கமிக |
புராதன கல்வெட்டுகளிலும் அட்டுவாக் கதைகளிலும் கிராமிக அல்லது கமிக எனும் பெயரால் குறிப்பிடப்படும் பிரிவினர் பற்றிக் கூறப்பட்டுள்ளன. அவர்கள் புராதன கிராமத் தலைவர்களாவர். அக்கிராமங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வெவ்வேறாக அமைந்திருந்தன கிராமங்களை வேறுபடுத்திக்கொண்டிருந்தது ஒடுங்கிய வனப்பகுதியாகும். இவ்வாறு வேறுபட்டி... |
பிரதிநிதித்துவப்படுத்திய நபர் கிராமிக எனும் பெயரால் குறிப்பிடப்பட்ட கிராமத் தலைவர் ஆவர். |
கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தலைவன் ஒருவன் இல்லத் தலைவர்களில் இருந்தே தெரிவுசெய்யப்பட்டான். அப்படித் தெரிவுசெய்யும்போது அவர்களுடைய சொத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கலாம். புராதன கிராமம் ஒன்றில் வாழும் ஏழைக் குடியானவன் அடுத்த போகத்தில் தருவதாகக் கூறிய வாக்குறுகியின் பேரில் கமிகவிடம் ந... |
ஒரு குழுவினரைச் சரியாக வழி நடத்துவதற்கு அக்குழுவினரின் நம்பிக்கையைப் பெற்ற நபர் ஒருவரே அதற்குத் தலைமைதாங்க |
வேண்டும். அக்கிராமத்தின் இல்லத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி கிராமம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக குடும்பத் தலைவர்களின் விருப்புடன் கிராமத்தில் வாழ்ந்த செல்வமும் பலமும் படைத்த ஒருவரைத் தங்கள் கிராமத் தலைவராக நியமித்துக் கொண்டுள்ளார்கள். |
கிராமத்து இல்லத் தலைவர்களில் இருந்து தெரிவு செய்யப்படுபவரே “கமிக” என்று,புத்த கோச தேரர் , “சமந்த பாசதிகா” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கமிகவினால் நிறைவேற்றப்பட்ட விடயங்களுள் கிராமப் பொது நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கல்,கிராமக் குளத்தை நிர்வ௫த்தல், அதிலிருந்து நீரை விநியோகித்தல் என்பன முக்கியத்துவமானவை.... |
அக்கிராமங்களில் வாழ்ந்த கிராமத் தலைவர்கள்,ஒருவரோடொருவர் நல்லுறவுடன் செயற்பட்டமை, சமாதான சகவாழ்வு நிலவுவதற்குப் பெருந்துணையாக அமைந்தது. இதுபற்றி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சித்துல்பவ்வ என்னும் இடத்தில் அமைந்துள்ள புராதன விகாரைக்குச் சொந்தமான கொரவக்கல எனுமிடத்தில் காணப்பட்ட கற்குகை ஒன்றில் இதனை உறுதிப்படு... |
பருமக |
புராதன காலத்தில் இந்நாட்டில் அரசியல் அதிகாரம் வளர்ச்சி பெறுவதில் பருமக எனும் பதவியால் குறிப்பிடப்படும் பிரபுகள் முக்கியத்துவம் பெற்றமை பற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறானதொரு பிரபு வகுப்பினரின் உருவாக்கம் மற்றும் அவர்களுக்கு நிர்வாக அதிகாரம் எவ்வாறு கிட்டியது என்பதையும் தேடியறிதல் இவ்விடத்தில் மு... |
இது தொடர்பான விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் அனைவரினதும் கருத்தாக இருப்பது பருமக எனப்பட்ட பிரதானிகளின் தோற்றம், பிரதான குளங்களின் பராமரிப்புடன் சம்பந்தப்பட்டதாக இருந்திருக்கலாம் என்பதாகும். அப்படியானால் உண்மையிலேயே அது எவ்வாறு உருவானது? |
கி.மு. 900 ஆண்டளவில் இந்நாட்டின் உலர் வலயத்தில் சிறு குளங்களை மையமாகக் கொண்டே குடியிருப்புக்கள் பரவிச் சென்றன. இக்குளங்கள் மழை நீரினால் போசிக்கப்பட்டன. சாதாரணமாக கிராமமொன்றில் வாழ்ந்த 10 - 15 குடும்பங்களுக்கு அவர்களது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய இக்குளத்து நீர் குறுகிய காலத்திற்கே போதுமானதாக இருந்தது. வரு... |
சிறு குளங்களில் மழைக் காலத்தில் சேகரிக்கப்படும் நீர் பற்றாக்குறையாகும் சந்தர்ப்பங்களில் உருவாகும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்வது உலர் காலநிலையால் மட்டுமல்ல,காலப் போக்கில் ஏற்படும் சனத்தொகைப் பெருக்கத்தாலும் பயன்பாட்டிற்கு மேலதிக நீர் தேவைப்படும் என்பதனாலுமாகும். பெருகிச்செல்லும் சனத்தொகைக்கு ... |
அருகருகே காணப்படும் பல குளங்களை கால்வாய்கள் மூலம் ஒன்றிணைத்து குளத் தொகுதி ஒன்றை உருவாக்குவதே அதுவாகும். அதற்கு இரு நோக்கங்கள் காணப்பட்டன : |
1. மேட்டுப் பாங்கான நிலத்தில் அமைந்துள்ள குளம் மழை நீரால் நிரம்பும்போது வெளியேறும் மேலதிக நீரைத் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றிற்குத் திருப்பி நீரைப் பாதுகாத்தல். |
2. இரு குளங்களுக்கு இடையில் உள்ள கால்வாயில் எந்நேரமும் நீரைப் பாயவிடுவதன் மூலம் அதன் இரு பக்க நிலங்களினதும் ஈரத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாகும். |
இவ்வாறு ஈரழிப்புமிக்க பிரதேசங்களில் இலகுவாக ஏனைய பயிர்களைப் பயிரிடக்கூடியதாக இருந்தது. |
புராதன காலத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட குளத் தொகுதிகளின் இடிபாடுகளை உலர் வலயத்தில் இன்றும் நாம் காணக்கூடியதாய் உள்ளது. இவ்வாறான ஒரு குளத் தொகுதியைக் குறிப்பிடுவதற்கு “வெவ்பிரபாதனய” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உலர் வலய மக்கள் அவற்றை “எல்லங்காவ” எனும் பெயரால் குறிப்பிட்டுள்ளனர்.குளத்தொகுதி ஒன்று... |
ஒன்று செயற்பட்டுக் கொண்டிருந்தது. |
உலர் வலயத்தில் அருகருகே சுயாதீனமாக இருந்த சிறிய கிராமங்கள்பற்றி இதற்கு முன்னர் கூறியுள்ளோம். இக்கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் சொந்தமான சிறிய குளங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டது. குளத் தொகுதி உருவாகும்போது, சுயாதீனமான தகிராமங்களுக்குச் சொந்தமான குளங்கள் பலவும் நீர் வழிந்தோடும் பிரதேச சம உ... |
இலங்கையின் புராதன கல்வெட்டுக்களில் காணப்படும் விடயங்களை நுணுக்கமாகப் பரிசீலித்துப் பார்க்கையில் தென்படுவதாவது,இச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்த கமிகமாருள் பலம் வாய்ந்த ஒருவர் ஒரு குளத் தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்வண்ணம் செயற்பட்டுள்ளமை ஆகும். இவர் பருமக எனும் பெயர... |
உலர் வலயத்தின் பரந்த நிலப்பிரதேசத்தில் இவ்வாறான குளத் தொகுதிகளின் நூற்றுக்கணக்கான இடிபாடுகளை இன்றும் எம்மால் காணக்கூடியதாய் உள்ளது.அவை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அக்குளத்தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பருமக இருந்திருப்பார் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இவ்வாறான பருமகமார் நூற்றுக் கணக்கானவர்களைப்... |
இவ்வாறாக இந்நாட்டின் பிரதேச நிர்வாகத்தைக் கொண்டு நடத்திய பருமகமாரின் அதிகாரம் விரிவடைந்து சென்றது. சில வேளைகளில் அவர்கள் அரசர் என்ற சொல்லாலும் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர்.மாத்தளை மாவட்டத்தில் எம்புல் அம்பே எனும் இடத்தில் உள்ள புராதன கல்வெட்டு ஒன்றில் போசனி அரசன் என்று அறியப்பட்ட பிராந்திய நிர்வ... |
ரஜ (ராஜா) எனும் சொல் மகிழ்விப்பவர் என்று பொருள் தருகின்றது.மக்களுடைய நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, அவர்களைக் குதூகலமடையச் செய்பவர்களைக் குறிக்க இச்சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.பருமக என்போர் அவ்வாறு செயற்பட்டமையால் பிற்காலத்தில் அவர்களைக் குறிப்பதற்கு அது போன்ற சொல் ஒன்றைப் பயன்படுத்தியிருக்கல... |
பிற்காலத்தில் இலங்கையை ஆட்சி செய்வதற்கு சிறந்த அரச பரம்பரை ஒன்று தோன்றுவதற்குக் காரணமான பின்னணி இவ்வாறே உருவாகி இருக்க வேண்டும். |
அரசின் வளர்ச்சி |
பன்முகப்படுத்தப்பட்டு இருந்த அதிகாரம்,ஒருமுகப்படுத்தப்படுவதே அரசின் வளர்ச்சியாகும். அரச அதிகாரம் மத்தியமயப்படுத்தல் |
என்பது நாட்டை ஒன்றுப்படுத்துவது என்று பொருள்படும். இதன் மூலம் பொருள் கொள்ளப்படுவது அதிகாரம் ஒரு நபரின் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகும். அதிகாரம் மையப்படுத்துவதன் மூலம் அரசு என்ற பொறிமுறை உருவாகின்றது. அதன் ஆட்சியாளர் அரசனாவார். அவருடைய நிர்வாகத்தின் கீழ்க் குறிப்பிட்ட நிலப்பிரதேசம் ஒன்று அமைவுறும். |
வரலாற்று மூலாதாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி அநுராதபுர இராசதானியை ஆண்ட முதல் மன்னன் பண்டுகபாயன் ஆவான். மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ளபடி, |
1. பிராந்திய ஆட்சியாளர்கள் பல (மாமன்மார்) ருடன் சண்டையிட்டு, அப்பிரதேசங்களைக் கைப்பற்றி அரசனானான். |
2. தனது ஆட்சியின் மத்திய நிலையமாக அநுராத புரத்தை தெரிவுசெய்து, அதனை நகரமாகக் கட்டியெழுப்பினான். |
3. தனது பத்தாவது ஆட்சி வருடத்தில் கிராமங்கஞக்கு எல்லைகள் வகுத்தான். |
தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் அரசு மேலும் மத்தியமயப்படுத்துவதற்கான தேவை மேலும் அதிகரித்தது. இன்னொரு விடயமாக,இந்து சமுத்திரத்தில் அக்காலத்தில் வளர்ச்சியுற்று வந்த வர்த்தகத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். |
கிழக்கு, மேற்கு நாடுகளை இணைக்கும் இந்து சமுத்திரத்தின் ஊடாக அமைந்திருந்த வர்த்தகப் பாதையின் மையத்தில் இலங்கை அமைந்திருந்தது.இப்புவி அமைவிடம் மட்டுமல்லாது, சர்வதேச வர்த்தகத்தில் இடம்பெற்ற இரத்தினக் கற்கள்,யானைகள், வாசனைத் திரவியங்கள் என்பன அவர்களுடைய உள்ளங்கவர்ந்த வர்த்தகப் பொருள்களாக இருந்தன. |
வளர்ச்சி அடைந்து வரும் இச்சர்வதேச வர்த்தகத்தில் தொடர்புபடும்போது சுதந்திர நாடாக செயற்படுவதற்கான தேவையும் எழுந்தது.இதனால் முழு நாடும் ஒரே நிர்வாகத்தில் வந்தாக வேண்டி இருந்தது. அப்போது பிரபல்யமாக விளங்கிய பிரதேசத் தலைவர்களில் சிலர் இதனை உணர்ந்தும் இருந்தனர். புனித வெள்ளரசு மரம் நடப்படும் வைபவத்திற்கு தேவநம்ப... |
நாட்டை ஐக்கியப்படுத்துவது தொடர்பான துட்டகைமுனு மன்னனின் செயற்பாடுகளில் பங்கு பற்றிய தளபதிகள், அப்பதவியைப் பெறுவதற்கு முன்னர் பருமகராக இருந்துள்ளனர். |
வேலு சுமண, புஸ்ஸ தேவ, தேரபுத்தாபய,நந்திமித்ர எனும் தளபதிகள் பருமகமார் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.இவ்வாறான கல்வெட்டுக்கள் பலவும் சித்துல் பவ்வ என்னும் இடத்தில் உள்ள கற்குகைகளில் காணப்படுகின்றன.துட்டகைமுனு மன்னன் பல்வேறு திறமைகள் உள்ள பருமகமாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அதுவரை... |
புராதன இலங்கையில் அரசியல் அதிகாரத்தை மத்தியமயப்படுத்துவடில் துட்டகைமுனு மன்னன் றிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டான். பாதிகாபய மன்னனின் காலத்தில் இலங்கையின் தூதுவர் ஒருவர் உரோமாபுரிக்குச் சென்று கண்ணாடி மணிகளாக என்பவற்றைக் கொண்டு வந்ததாக மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டிருந்தமை மேலும் முன்னேற்றமடைந்து பரிணமிப்பதற்கு வசப மன்னன் காரணமாக இருந்தான். அவனுடைய ஆட்சியின்போது முழு இலங்கையும் ஒரே அலகாகச் செயற்பட்டது. வசப மன்னனால் அமைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இந்நாட்டில் பரந்துபட்ட பிரதேசங்களில் விரவிக் கிடக்கின்றன.அத்தோடு நிர்வாக மாவட்டங்கள் (ஆஸ்தா... |
3.2. அரச கோட்பாடு |
அரசியல் பலம் மையப்படுத்தப்பட்டபோது உருவான மகா ராஜா மிகவும் சக்தி வாய்ந்த நபராவார். அவர் தமது குடிமக்களின் முன்னர் தோற்றம்தர விரும்பியது சக்தி வாய்ந்த உருவத்திலாகும். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுதல், நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கல், பிரஜைகளிடையே ஆன்மீக வளர்ச்சி யை ஏற்படுத்தல் என்பன தமது மக்கள... |
வெளிநாட்டு எதிரிகளின் இடையூறுகளில் இருந்து காப்பாற்றுதல், குளங்கள், கால்வாய்கள் கட்டிப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல், தூபி, விகாரைகள் அமைத்து மக்களின் ஆன்மீகத் தன்மையை வளர்த்தல் என்பன இதற்கு உதாரணங்களாகும். எல்லாளன், நிஸ்ஸங்கமல்லன் ஆகிய அந்நிய மன்னர்களும் கூட மேற்குறிப்பிட்ட விதமாகச் செயற்பட்... |
மன்னர்களின் செயற்பாடுகளும் அவர்கள் தோற்றம்தர விரும்பிய விதத்தையும் வைத்து அரசு பற்றிய பல்வேறு கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஆண்டவன், போதி சத்துவர், மலையின் அரசன் (பர்வதராஜா),சக்கரவர்த்தி என்ற எண்ணக்கருக்களாக அவை வளர்ச்சியுற்றன. |
ஆட்சி செய்யும்போது அவர்கள் ஆண்டவனாக வோ, போதிசத் துவராகவோ தோற்றமளிப்பதை பொதுவாகக் காண முடிந்தது. தம்புள்ளை விகாரை அமைந்துள்ள பாறைக் கல்வெட்டில் குட்டகண்ண அபய மன்னன் அதில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பது நரேஸ்வர (நரஇசெர) எனும் பெயராலாகும். மனிதர்களின் கடவுள் என்பது அதன் பொருளாகும். |
மகாசேன மன்னன் குளங்கள், கால்வாய்கள் கட்டி பொருளாதாரத்திற்கு ஆற்றிய பணிக்காக “மின்னேரித் தெய்வம்'' என்று வழிபடும் அளவிற்கு உயர்ந்துள்ளான். இன்றும் இத்தெய்வத்திற்கு அமைக்கப்பட்ட கோவில்களை உலர் வலயத்தில் காணக்கூடியதாய் உள்ளது. |
முதலாம் காசியப்ப மன்னன் குபேரக் கடவுளாகத் தன்னைக் கருதிக் கொண்டான்.இவனது கல்வெட்டு ஒன்றில் அவனைக் குறிப்பதற்காக அலகபய மகாராஜா எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்திரலோகங்களின் மகாராஜா என்பதாகும். செல்வத்தின் அதிபதியாகக் கருதப்படும் குபேரனுடைய வசிப்பிடம் இதுவாகும். இது மலை ஒன்றைக் குற... |
அரசன் போதிசத்துவராகத் தோற்றம் அளிப்பது இன்னொரு விடயமாகும். அரசன் தனது குடிமக்களின் மானசீக ஆறுதலுக்காக நீது,நேர்மை, ஆன்மீகத் தன்மையுடன்கூடிய ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குப் பொறுப்பான கடமைப்பாட்டுடன் இருப்பதாகக் காண்பிப்பதுடன் வேறுவிதமாக, மக்கள் அரசன் மீது நம்பிக்கையும் மரியாதையும் செலுத்த வேண்டும் என்ப... |
இந்நாட்டு மன்னர்களால் பின்பற்றப்பட்ட இன்னொரு எண்ணக்கரு சக்கரவர்த்தி என்பதாகும்.முழு உலகிற்கும் அரசன் என்ற பொருள்படும் ஒரு வார்த்தையே இதுவாகும். சமஸ்கிருத மொழியில் வழங்கும் இச்சொல் சிங்களத்தில் “சக்விதி" எனக் குறிப்பிடப்படுகின்றது. கி.பி. 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த அரசர்களில் சிலர் தனத... |
அரசு பற்றி வெவ்வேறு கோட்பாடுகள் காணப்பட்டாலும் அக்கொள்கை ஒவ்வொன்றும் அரசனின் உயர்வைப் பற்றிக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டவையாகும். ஆட்சியாளரைச் சுற்றி அவ்வாறான உன்னதமான நிலை உருவாகும்போது ஆள்பவன் முன்மாதிரியானவனாகத் திகழ வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.இதற்கமைய செயற்படுவதற்கு ஆள்பவன் நிர்... |
அரச பாரம்பரியம் |
புராதன இலங்கையில் அரசுரிமை கிட்டிய விதத்தைப் பார்க்கையில், அது சகோதரனிடமிருந்து சகோதரனுக்கோ, தந்தையிடமிருந்து மகனுக்கோ கிட்டியதாகத் தெரிகின்றது. |
தேவனம்பியதிஸ்ஸ மன்னனின் மரணத்தின் பின் அவரது சகோதரர்கள் அரசர்களாகியுள்ளனர். துட்டகைமுனு மன்னனுக்குப் பின்னர் அரசுரிமை பெற்றவர், அவரது சகோதரனான சத்தாதிஸ்ஸ ஆவார். சகோதரனிடமிருந்து சகோதரனுக்கு அரசுரிமை வருகையில் அரசனின் இளைய சகோதரர்களுள் மூத்தவருக்கு அரசுரிமை கிட்டியுள்ளது. அவ்வாறல்லாத சந்தர்ப்பத்தில் மோதல்க... |
தந்தையிடமிருந்து மகனுக்கு அரசுரிமை வருவது சாதாரண ஒரு விடயமாகும். காவந்திஸ்ஸ மன்னனுக்குப் பிறகு துட்டகைமுனுவுக்கு அரசுரிமை கிட்டியது, வசப மன்னனின் மரணத்தின் பின் அவரது மகன் வங்க நாசிக்க திஸ்ஸவுக்கு அரசுரிமை கிட்டியது. இவ்வாறு தந்தையிடமிருந்து மகனுக்கு அரசுரிமை கிடைப்பது இலங்கை வரலாறு முழுவதும் காணப்படுவதோடு அரசனு... |
மன்னனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது நாமறிந்த ஒரு விடயமாகும். அவ்வாறு செயற்பட நேர்ந்தமைக்குக் காரணம் பட்டத்து இராணியின் மகனான முகலன் பட்டத்து இளவரசனாக இருந்தமையாலாகும். காசியப்ப மன்னனின் தாய் தாதுசேன மன்னனின் இரண்டாவது மனைவியாவாள். |
இவற்றிற்கு மாறாக அரசனின் மனைவியின் சகோதரனுக்கு மற்றும் அரசனின் சகோதரியின் புத்திரனுக்கு அரசுரிமை கிட்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன. மேற்குறிப்பிட்ட விதத்திலான அரசுரிமையாளன் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு நேர்ந்துள்ளன. |
அரச கருவி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.