text stringlengths 0 4.01k |
|---|
அரசியல் ரீதியாக அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் பருமகமாராக இருந்த பலரும் ஒன்றுபடுத்தப்பட்டு அரசு உருவாக்கப்பட்டதால் அரசன் அனைத்து பருமகமாரினதும் தலைவனாகச் செயற்பட்டான். ஆகையால் அரசனைக் குறிப்பிட மகா பருமக அல்லது மபுறுமுகா என்ற பதவிப் பெயர் பயன்படுத்தப்பட்டது. அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதற... |
மகாராஜா (மபுறுமுகா) |
தலைமை அமைச்சர் - மகா அமதி (மஹமத) |
அமைச்சர்கள் (அமெத)+தளபதிகள் (சேனபதி) |
பொருளாளர் (படகரிக) |
உணவுச்சாலை அதிகாரி (பதகு) |
வழக்கங்கள் மரபு முறைகள் தொடர்பான அதிகாரி (கொதுறு கேனா) |
நகர பரிபாலகர் (நகரகுத்திக) |
நகர கட்டட நிர்மாணி (நகர வடிக) |
குதிரைப் பிரிவின் தலைவர் (அச அதெக) |
யானைப் பிரிவின் தலைவர் (ஹதி அதெக) |
நாட்டியப் பிரிவின் தலைவர் (நட அதெக) |
காசு அச்சிடும் பிரிவின் தலைவர் (ரூப அதெக) |
வர்த்தக நடவடிக்கைக்கான தலைவர்(பனஅதெக) |
அரச ஆவணங்களின் தலைவர் (கன பெடிக) |
இவ்விதமாக அதிகாரிகளைக் கொண்ட அரச கருவி மூலம் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவது இலகுவானதாக அமைந்தது. இவற்றால் அதிக பலனை அனுபவித்தவர்கள் நாட்டின் பொதுமக்கள் ஆவர். |
இந்நாட்டை ஆண்ட முக்கியமான மன்னர்கள். |
இலங்கையின் அரசியல் அதிகார வளர்ச்சி நீண்ட காலமாக நிகழ்ந்துவந்த சமூக, பொருளாதார செயற்பாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வந்த விதத்தை இதுவரை கலந்துரையாடப்பட்ட கருத்துக்களில் இருந்து நீங்கள் விளங்கியிருப்பீர்கள். விசேடமாக கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இந்து சமுத்திரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த சர்வதேச வர... |
ஒரே ஆட்சி முறைக்குள் வருவதே பயன்மிக்கதாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் அரசியல் அதிகார வளர்ச்சிப் போக்கிற்கு இணையாக ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட |
கொள்கைகளையும் பங்களிப்புகளையும் இந்நாட்டு ஆட்சியாளர்கள் ஒரு சிலரைக் கொண்டு இப்பகுதியில் கலந்துரையாடப் போகிறோம். |
துட்டகைமுனு மன்னன் |
வரலாற்று மூலாதாரங்களில் விரிவான முறையில் பிரஸ்தாபிக்கப்படுகின்ற துட்டகைமுனு மன்னன்,இந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை முறையான விதத்தில் உருவாக்குவதில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்தவனாவான். அவனது காலத்தில் வேகமாக வளர்ச்சியுற்றுவநீத இந்து சமுத்திர வியாபார நடவடிக்கைகளிலிருந்து பேரளவு இலாபத்தை எஈட்டிவந்த மாந... |
இப்பாடத்தின் இரண்டாம் பகுதியில் விளக்கப்பட்டதற்கு அமைவாக, இதுவரை பன்முகப்படுத்தப்பட்டிருந்த பிராந்திய அதிகாரத்தைக் கொண்டிருந்த பருமகமாரை ஒன்று சேர்த்துக் கொண்டமை துட்டகைமுனு மன்னனால், இந்நாட்டு அரசியல் அதிகார வளர்ச்சிக்கு ஆற்றப்பட்ட பெரும்பணியாகும். |
இறுதியாக மகாராஜாவாக மகுடம் சூட்டப்பட்ட அவனுக்குப் பெரும் அதிகாரப் பலம் கிட்டியது. தான் எந்தளவு அதிகாரம் உள்ளவனாக இருந்த போதிலும் ஆட்சியாளனின் பொறுப்பு பொது மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் என்பதைப் புரிந்து கொண்டமையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்திய நல்லெண்ணத்தின் மூலம் தெரிய வருகின்றது. ருவன்... |
துட்டகைமுனு மன்னன் மதிக்கப்பட வேண்டியது அவன் பெளத்த மதத்திற்கு ஆற்றிய தொண்டுகளுக்காக மட்டுமன்றி, பன்முகப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் அரசியல் அதிகாரத்தை மிகவும் சக்கி வாய்ந்த ஒன்றாக அமைத்தமையுமாகும். இது |
அவ்வரசனின் செயற்பாடுகளில் துலாம்பரமாகத் தெரியும் ஒன்றாகும். |
வசப மன்னன் |
இலம்பகர்ணவம்சத்தின்முதல் மன்னனானவசபன், இந்நாட்டு ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டவர் ஆவார். உள்நாட்டு நிர்வாகத்தை முறையாகக் கட்டியெழுப்புவதற்காக அவனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னுதாரணங்களாகும். அவனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாபிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின... |
முதன் முதலாக இந்நாட்டில் பாரிய குளங்களை அமைப்பதற்கு முன்னோடியாக வசப மன்னன் விளங்கினான் என்று வரலாற்று மூலாதாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இம்மன்னன் 11 பெரிய குளங்களை நிர்மாணித்ததாக வம்சக் கதைகளில் இருந்து தெரிய வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கான தூண்டலைப் பெற்றதற்கான காரணம், தென் இந்தியாவில் கிருஸ்ணா ... |
இந்நாட்டின் பெளத்த விகாரைகளைப் புனரமைப்பதற்காக வசப மன்னன் செயற்பட்ட விதம் எம்மன்னனது நடவடிக்கைக்கும் இரண்டாம் பட்சமானதல்ல. விகாரைகள் பழுதடைகையில் அவற்றைப் புனரமைப்பதற்கும் பிக்குமாரின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் அவ்வரசனால் விகாரைகளுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் பற்றிய கல்வெட்டுக்கள் அதிகமாகக் காணப்... |
தேசிய வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அடிப்படையை உருவாக்கி, பெற்ற வருமானத்தைப் பயன்படுத்தி நாட்டின் நீர்ப்பாசன நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கும் அதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வசப மன்னனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னுதாரணங்களாய் உள்ளன. |
முதலாம் விஜயபாகு மன்னன் |
இந்நாட்டை ஆண்ட மன்னர்களுள் மேன்மையான ஒருவன் முதலாம் விஜயபாகு ஆவான். தென்னிந்திய சோழ மன்னர்களின் |
ஆகிக்கம் பரவலடைந்து, இலங்கையும் நீண்ட காலமாக இவ்வாட்சிக்கு உட்பட்டிருந்தது. இவ்வேளையில் நுண்ணறிவுடன் திட்டமிட்ட முறையில் படையெடுப்பை நடத்தி, சோழ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இம் மன்னனையே சாரும். |
சிறு வயத்தில் கீர்த்தி என்ற பெயருடன் ௨ருகுணைக்குச் சென்று அங்கு வளர்ந்து வந்தான். அரச வம்சத்தவர்களான கீர்த்தி குமாரனுக்கும் அவனது பெற்றோர்க்கும் அடைக்கலம் வழங்கியது அங்கு வாழ்ந்த அரச அதிகாரி ஒருவராவார். சித்தாருபிம புத்தனாயக்க என்ற பாதுகாப்புஅதிகாரியே அவராவார். புத்தனாயக்கவால் அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்ட... |
பராக்கிரமம்மிக்க சோழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு விஜயபாகு மன்னனால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைக |
ளும் முழு நாட்டினரதும் பாதுகாப்பைக் கருதியே மேற்கொள்ளப்பட்ட சாதனைமிகு விடயங்களாகும். நாட்டின் சுதந்திரத்திற்கும் இறைமைக்கும் பாடுபட வேண்டியது நாட்டு மக்களுக்காக ஆட்சியாளரால் ஆற்றப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும். |
யுத்த நடவடிக்கை மூலம் சோழர்களைத் தோல்வியடையச் செய்து, நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்திய மன்னன் பின்னர் நாட்டை |
அபிவிருத்தி அடையச் செய்வதற்கு முயன்றான்.சோழர் காலத்தில் கவனியாது விடப்பட்டிருந்த விகாரைகளைப் புனரமைப்பதில் அவன் அவசரமாக ஈடுபட்டான். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு மன்னன் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டான். அநுராதபுரத்திற்கு பதிலாக பொலன்னறுவையையே தனது தலைநகராகக் கொண்டான். அவ்வாறான நடவடிக்கை ஓன... |
முதலாம் விஜயபாகு மன்னன் செயற்பட்ட விதம் அதற்குப் பின்னைய காலத்தில் பெருஞ் செல்வாக்கைச் செலுத்தியது. பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் இந்நாட்டின் மீது செல்வாக்கைச் செலுத்தும் வரை பாதுகாப்பாக இருந்த இலங்கையின் இறைமை அம்மன்னரின் மதியூகமான சிறந்த கொள்கைகளின் பிரதிபலனாகும். |
முக்கியமான விடயங்கள் |
1.ஆரம்ப காலத்தில் இலங்கையின் அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தது. பிராந்தியங்களில் பலமுற்றிருந்த தலைவர்களால் ஆட்சியதிகாரம் மேற்கொள்ளப்பட்டது. |
2. கிராமிய மட்ட நிர்வாக நடவடிக்கைகளை கமிக எனும் கிராமத் தலைவர்கள் மேற்கொண்டு வந்தனர். திராமங்களில் சில வீடுகளுக்குத் தலைமை தாங்கியவர் இல்லத் தலைவர் கிருகபதி எனப்பட்டார். இந்த இல்லத் தலைவர்களின் பிரதிநிதியே கமிக எனப்பட்டார். திராமங்கள் பலவற்றை உள்ளடக்கிய பரந்த பிரதேசத்தை நிர்வகித்தவர் பருமக ஆவார். |
3. குடியிருப்புக்கள் அதிகரித்துச் செல்வதும் அதற்குச் சமமாகப் பல்வேறுபட்ட தேவைகள் எழுவதும் அதனூடாக வாழ்க்கை போராட்டத் தன்மை அடைவதும் தொடர்பான காரண காரியங்களால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள், மோதல்கள் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை மேற்கொள்வதற்கு அரசியல் தாபனம் தேவைப்படுகின்றது. இலங்கையின்... |
4. பன்முகப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம் மத்தியமயப்படுத்தப்பட ஆரம்பித்தது துட்டகைமுனு மன்னனாலாகும். அரசியல் நோக்குடன் துட்டகைமுனு மன்னனால் வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை பூரணத்துவம் அடைந்தது இலம்பகர்ண வம்சத்து வசப மன்னனின் ஆட்சியுடனாகும். |
5. அரசியல் அதிகார மையப்படுத்தல் என்பது, நாட்டின் நிர்வாகம் ஒருவரின் ஆட்சிக்கு உட்படுவதாகும். அங்கு நாட்டு நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கு நிரந்தரமான நிர்வாகிகள் குழு ஒன்று உருவாகும். அரசர் உட்பட அக்குழுவினரும் அவர்களால் பிறப்பிக்கப்படும் சட்டதிட்டங்களும் அவற்றைச் செயற்படுத்தும் |
அமைப்புகளும் அரசு எனப்படும். |
6. நிருவாகத்தை நடத்திச் செல்வது தொடர்பாக, அரசர்கள் பல்வேறு கொள்கை கோட்பாடுகளைக் கொண்டிருந்தனர். கடவுள் தன்மையை வெளிப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். |
பஞ்ச வஸ்துக்கள் : |
இவற்றைப் பிரயோகிப்பதால் சௌபாக்கியம் ஏற்படும் எனக் கருதப்படும் ஐந்து வகைப் பொருள்களை இது குறிக்கும். இதில் ஆல வட்டம், சாமரை, பாணிகள், மங்கள வாள், நெற்றிப் பட்டம் என்பன உள்ளடங்கும். இ்ப்பஞ்ச வஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டது மன்னனின் மூடிசூடு விழாவின் போதாகும். அசோக மன்னனால் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ப... |
தேவனம்பிய எனும் பட்டம் : |
தெய்வத்திற்குப் பிரியமானவன் (தேவனம்பிரிய) என்ற பட்டத்தைப் பயன்படுத்தியவர் இந்தியர் பேரரசனான அசோக மன்னராவார். அம்மன்னரின் காலத்தவரான இந்நாட்டை ஆண்ட திஸ்ஸ மன்னனும் அப்பட்டத்தைக் கையாண்டு, தேவனம்பிய திஸ்ஸ என்று தன்னை குறிப்பிட்டு கொண்டார். |
இந்திரலோகம் : |
(அளகாபுரி) |
செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் வாழ்விடமே இது என இதன்படி ஆண்டவன் வாழும் இடமான வடமுனைத் தீவிலுள்ள பூரணத்துவமான ,நகரங்களில் இதுவும் ஒன்றாகும் எனவும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
பண்டைய சமூகம் |
அறிமுகம் |
எச்சமூகத்திலும் எக்காலத்திலும் வாழும் பெருந் |
தொகையானோர் சாதாரண பொது மக்களே |
ஆவர். ஆள்பவர்கள், உத்தியோகத்தர்கள், சமயத் |
தலைவர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் என் |
போர் இவர்களுள் சிறு தொகையினரே ஆவர். |
வரலாறு என்பது இவர்கள் அனைவரையும் |
முன்னிருத்தும் செயற்பாடாகும்.உண்மை |
எவ்வாறிருநீத போதிலும் அதிகமான வரலாற்று |
மூலாதாரங்களில் பெருமளவிற்கு முன்னிலைப் |
படுத்தப்பட்டிருப்பது இரண்டாவதாகக் கூறப் |
பட்ட சிறு தொகையினரின் விவரங்களாகும். |
எனினும் அவர்களைப் பற்றி நாங்கள் தெரிந்து |
வைத்துள்ளதுபோல் சமூகத்தில் பெரும்பான் |
மையாக உள்ள சாதாரண பொது மக்களைப் |
பற்றிய புரிந்துணர்வு எம்மிடம் குறைவாகும். |
எமது நாட்டின் வரலாற்றை நன்கு தெரிந்து |
கொள்ள வேண்டுமென்றால் பண்டைய |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.