text stringlengths 0 4.01k |
|---|
எமது நாட்டை ஆண்ட மன்னர்கள் தமது |
அயல் நாடுகளுடனும் சில வேளைகளில் தூர |
நாடுகளுடனும் நட்புறவுத் தொடர்புகளை வைத்திருந்தனர். |
காலத்திற்குக் காலம் இத்தொடர்புகள் |
இடம்பெற்ற பிரதேசங்கள் மாற்றமடைந்தன. |
இந்தியா, அரேபியா உட்பட ஏனைய ஆசிய |
நாடுகளுடன் ஆதி காலத்தில் இருந்தும் ஐரோப்பிய |
நாடுகள் சிலவற்றுடன் அண்மிய நூற்றாண்டுகளில் |
இருந்தும் தொடர்புகள் இருந்து வந்தன. இலம்பகர்ண |
அரசர்களுள் புகழ்பெற்ற முதலாம் |
கஜபாகு மன்னன் (கி.பி. 114 - 136) பத்தினி |
தெய்வக் கோயில் ஒன்றின் திறப்பு விழாவிற்கு |
தென்னிந்தியாவில் சேர இராச்சியத்திற்கு வந்ததாக |
அந்நாட்டுக் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. |
சில வேளைகளில் இவ்வரசியல் சுற்றுலாவின் |
நோக்கம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் |
உறவுகளை மேம்படுத்திக்கொள்வதாக இருந்திருக்கலாம். |
பாதிகாபய அரசனால் (கி.மு. 22 - கி.பி. 07) உரோம |
நாட்டிற்கு தூதரக அதிகாரிகளை அனுப்பியதற்கான |
குறிப்பு மகாவம்சத்தில் உள்ளது. ௬வன்வெலி தாது |
கோபத்திற்கு பூஜை செய்வதற்குத் தேவையான |
கண்ணாடி மணிகளைப் பெற்று வருவதற்காகவே |
இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். |
இ.பி. 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டுகளில் இந்நாட்டு |
ஆட்சியாளர்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை |
ஏற்படுத்திக் கொண்டனர். இக்காலத்தில் |
எமது நாட்டுத் தூதுவர்கள் சீனாவுக்குச் |
சென்று வந்தனர். ஆறாம் அக்கிரபோதி மன்னன் |
ஆட்சிக் காலத்தில் இத்தொடர்புகள் மிகவும் |
பலப்பட்டிருந்தன. அக்காலகட்டத்தில் இலங்கை |
இராஜதந்திரிகள் இருபது முறை சேனாவுக்கு |
விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். வியாபாரத் |
தொடர்புகளை வளர்த்துக் கொள்வது இவர்களின் |
மூல நோக்கமாக இருந்தாலும் கலாசாரத் தொடர்பு |
களிலும் செல்வாக்குச் செலுத்தினர். |
இலங்கை தமது அயல்நாடுகளஞுடன் மேற் |
கொண்ட உறவுகளில் திருமணத் தொடர்புகள் முக்கியமானவையாகும். |
இந்தியாவின் பலம் வாய்ந்த நாடுகளான கலிங்கம், பாண்டிய நாடு |
என்பவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட திருமணங்கள் |
தொடர்பாக வம்சக் கதைகள் கூறுகின்றன. |
முதலாம் விஜயபாகு மன்னன் (கி.பி. 1070 - 1110) |
கலிங்க இளவரசி திரிலோக சுந்தரியைத் திருமணம் |
செய்து கொண்டதோடு தனது சகோதரியான |
மித்தா இளவரசியை பாண்டிய இளவரசனுக்கு |
மணமுடித்துக் கொடுத்ததன் மூலம் தனது அரசியல் |
பலத்தை உறுதிப்படுத்தி இருக்கலாம் |
சமயம், மொழி ரீதியில் வேறுபட்டிருந்தாலும் |
தமது அண்டை நாட்டுப் பிரஜைகளுடன் |
நம்பிக்கையுடன் செயற்படுவது எமது புராதன |
ஆட்சியாளர்களின் வெளிநாட்டுக் கொள்கையில் |
தெளிவாகத் தெரியும் இயல்பாகும். முதலாம் |
விஜயபாகு மன்னரால், பொலன்னறுவையில் |
கட்டப்பட்ட தலதா மாளிகையின் பாதுகாப்புக் |
காக வேளைக்காரப் படையை நியமித்தது இதற்குச் |
சிறந்ததொரு உதாரணமாகும். இவர்கள் தென்னிந்தியாவில் |
இருந்து வந்து சம்பளத்திற்காக பணியாற்றிய |
படையினராவர். |
கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் எங்களது |
மன்னர்கள் அரபு நாடுகளுடன் மிக நெருக்கமான |
உறவுகளை ஏற்படுத்திக் கொள்கையில் அராபிய |
வணிகர்களின் தலைமையில் அக்கால இந்து |
சமுத்திரத்தில் இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கு |
இலங்கையின் ஒத்துழைப்பை உறுதி |
யாகப் பேணிக்கொள்வதே அதன் நோக்கமாக |
இருந்தது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த |
அராபிய வரலாற்று ஆசிரியரான அல் - பல |
சூரியின் குறிப்புகளின்படி அக்கால சிவப்புத் |
தீவின் (இலங்கையின்) மன்னர், இஸ்லாமிய அரசர்களுடன் |
பரிசுகளைப் பரிமாறிக் கொண்டதாகத் |
தெரிகின்றது. |
சுருங்கக்கூறின் புராதன காலத்தில் இந்நாட்டில் |
நிலவிய நிர்வாகத்தின் தலையாய நோக்கங்களாக |
இருநீதவை, நாட்டு மக்களிடையே சமாதான |
சகவாழ்வை உருவாக்குதலும் அவர்களுடைய |
நலன்களைக் கவனித்தலும் தாய்நாட்டின் பாதுகாப்பும் |
மக்களுடைய எதிர்கால நல்வாழ்வுக்காக |
நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தலுமாகும். |
தங்களது அயல் நாடுகளுடன் நல்லுறவுடன் |
செயற்படுவதற்கும் அவர்கள் தூர நோக்குடன் |
செயற்பட்டுள்ளமை தெரிய வருகின்றது. |
4.2. பொருளாதாரம் |
நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் |
கிராமங்களிலேயே வாழ்ந்தனர். |
அக்கிராம வாசிகளின் வாழ்க்கை இன்றைய சமூகத்துடன் |
ஒப்பிடுகையில் மிகவும் எளிமையானதாக |
இருந்தது.அனேகமானோரின் வாழ்வாதாரத் |
தொழிலாக விவசாயமே காணப்பட்டது. |
சிலர் சேனைப் பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபட்டதோடு |
பலரும் நெற்செய்கையிலேயே ஈடுபட்டு |
வந்தனர். மந்தை வளர்ப்பும் வாழ்வாதாரங்களுள் |
ஒன்றாக இருந்தது. இவற்றுடன் பல்வேறு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.