text stringlengths 0 4.01k |
|---|
தொழில்களில் ஈடுபட்டோரும் அவரவருக்கு |
ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். |
4.2.1. விவசாயம் |
இலங்கையின் புராதன சமூகத்தில் வாழ்ந்த |
பெரும்பாலான கிராமத்தவர்களின் பிரதான |
வாழ்வாதாரமாக விவசாயமே இருந்துவந்தது. |
பயிர்ச்செய்கையுடன் மந்தை வளர்ப்பும் |
மேற்கொள்ளப்பட்டு வந்தது. விவசாயம் இரு |
வகைகளில் இடம்பெற்றது. இதில் முதலாவது |
சேனைப்பயிர்ச்செய்கையாகும். இரண்டாவது நெற் |
பயிர்ச்செய்கையாகும். இதில் பழைமையானது |
சேனைப் பயிர்ச்செய்கை என்று வரலாற்று மற்றும் |
தொல்லியல் மூலாதாரங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. |
வரலாற்று மூலாதாரமான "புத் சரண" எனும் இலக்கியப் படைப்பில் |
“செஹென்" என்றும் சிங்கள உம்மக்க ஜாதகத்தில் |
“சேன” என்றும் கல்வெட்டுக்களில் "பிடபிம்" |
என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதும் புராதன கால |
சேனைகளையேயாகும். |
சேனைப் பயிர்ச் செய்கை |
சேனைப் பயிர்ச் செய்கை என்பது மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாகும். |
தமக்குத் தேவையான அளவு தானியங்களையும் மரக்கறி வகைகளையும் |
பயிரிட்டுக்கொள்ளக்கூடிய அளவுக்குப் போதுமான |
நிலப் பரப்பை, பெருங் காடுகளிலிருந்து பெற்று, |
அவற்றைச் சுத்திகரித்து தீயிட்டுக் கொளுத்தி |
சேனை ஒன்றை உருவாக்கிக் கொள்வர். முதலில் |
சுத்திகரிக்கப்பட்ட நிலப்பகுதிக்கு தீயிட முன்னர் |
சப்தமிட்டு ஒலி எழுப்பி சகல உயிரினங்களையும் |
இதிலிருந்து அகற்றிவிடுவர். |
புதிதாக தீயிடப்பட்ட காணி "நவதெளி" சேனை |
எனப்படும். சேனைகள் மிகவும் வளமானவை |
"நவதெளி சேன" எனும் பிரயோகம் சத்தர்ம |
ரத்னாவலியில் காணப்படுகின்றது. இலங்கையில் |
சில பிரதேசங்களில் "நவதெளிசேன" என்பதற்கு |
வேறு பொருள் கொள்ளப்படுகின்றது. குரக்கன், |
கொள்ளு, உளுந்து, பயறு, சோளம், கம்பு, |
வரகு, தினை, ஓமம் எனும் தானிய வகைகள் |
ஒன்பதும் செழிப்பாக வளரும் சேனைகள் |
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. சில காலம் |
கைவிடப்பட்டுப் பின்னர் மீளவும் பயிரிடப்படும் |
சேனைகளை "கனத்த" எனும் சொல்லால் |
அநுராதபுர பிரதேசத்து விவசாயிகள் குறிப்பிடுவர். |
சேனைச் செய்கையின்போது பின்பற்றப்பட்ட |
நடைமுறை, ஓரிரு முறை பயிரிடப்பட்ட |
நிலத்தைக் கைவிட்டு விடுவதாகும். சிறிது காலம் |
அவ்வாறு கைவிடப்பட்ட நிலத்தில் மீண்டும் |
காடுகள் வளரும். இதனால் புராதன காலச் |
சேனைச் செய்கையால் சூழலுக்கு மேலதிக |
பாதிப்புகள் ஏற்படவில்லை. |
சேனைகளில் பயிரிடப்பட்டவைகளுள் உழுந்து, |
வரகு, பயறு, குரக்கன், சோளம், எள்ளு, |
கடுகு, சீரகம், தினை, அரிசி போன்ற தானிய |
வகைகளும் பூசணிக்காய், கத்தரிக்காய், சாம்பல் |
பூசணி போன்ற மரக்கறி வகைகளும் நெல், |
கரும்பு, பருத்தி என்பனவும் பயிரிடப்பட்டன. |
அவையவற்றுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சேனை |
களிலே அவை பயிரிடப்பட்டன. அக்காலத்தில் |
நாட்டிற்குத் தேவையான துணிகளும் கருப் |
பட்டியும் உற்பத்தி செய்வதற்குப் போதியளவு |
பருத்தியும் கரும்பும் விளையும் அளவுக்கு |
அப்பயிர்ச் செய்கைகள் முன்னேற்றம் அடைந்தி |
ருந்தன. சம்பளம் பெற்று கரும்புத் தொழிலில் |
ஈடுப்பட்டோர் பற்றி வம்சக் கதைகளில் |
கூறப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நாட்டுக்குத் |
தேவையான கருப்பட்டி இந்நாட்டில் தயாரிக்கப் |
பட்டது. 16 ஆம் நூற்றாண்டு வரை இந்நாட்டிற்கு |
சீனி இறக்குமதி செய்யப்படவில்லை என |
அறிஞர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. |
சேனை ஒன்று உருவாக்கப்படுவது தமது இருப்பிடத்தில் |
இருந்து ஓரளவு தூரமான பிரதேசங்களிலாகும். |
சேனையில் இருந்து விளைச்சல் |
பெற்றுக்கொள்ளும்வரை அவர்கள் சேனையில் |
கட்டப்பட்டுள்ள குடிசை ஒன்றில் தற்காலிகமாகத் |
தங்கியிருப்பர். சேனையை வன விலங்குகளில் |
இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அதனைச் |
சூழக் கட்டப்படும் கம்புகளால் ஆன வேலி |
"தண்டு வெட்ட'' என்று குறிப்பிடப்படும். |
சேனையில் உயர் மரம் ஒன்றில் கட்டப்பட்ட சிறு |
குடிசை "பெல" எனப்படும். |
இரவு நேரத்தில் வரும் மிருகங்களிடம் இருந்து |
தமது சேனையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக |
பொழுது புலரும் வரையில் இதில் தங்கியிருப்பர். |
சேனைப் பயிர்ச்செய்கைக்காக அரசர்களில் சிலர் |
வரி அறவீடு செய்துள்ளனர். கெதிஅட, கெடுகனக |
என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது |
இவ்வாறான இருவகை வரிகளையாகும். பொலன்னறுவையை |
ஆண்ட நிஸ்ஸங்கமல்ல மன்னன் |
(கி.பி. 1187 - 1196) இவ்விரு வகை வரிகளையும் |
நீக்கியதாக அவனது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.