text stringlengths 0 4.01k |
|---|
அநுராதபுரம் தலைநகராக விளங்கிய காலத்தில் |
நாட்டின் நிர்வாக மத்திய நிலையமாகவும் அது |
விளங்கியது. அப்போது மன்னன்தலைநகரிலிருந்து |
ஆட்சி செய்தான். இக்காலத்தைப் போன்று அன்று |
தொடர்பு சாதனங்களோ போக்குவரத்து வசதிகளோ |
இல்லாத காரணத்தினால் அநுராதபுரத்தில் இருந்து |
தூரப் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளை |
மேற்கொள்வது சிரமமான காரியமாக இருந்து |
வந்தது. இதனால் உள்ளூராட்சி தொடர்பான |
தனியானதொரு நிர்வாக அமைப்பு இருந்ததற்கான |
ஆதாரங்கள் வரலாற்று மூலாதாரங்களில் இருந்து |
கிடைக்கப் பெற்றுள்ளன. வசப மன்னனுடைய |
ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் |
பொற்சாசனம் இது தொடர்பான ஆதாரமாகும். |
அதில் கூறப்பட்டுள்ள விடயமாவது நாகதீப |
(யாழ்ப்பாணத்தை நிர்வடுத்த ரிஷிகிரி எனும் |
அமைச்சர் அங்கு பியங்குக திஸ்ஸ எனும் |
விகாரையைக் கட்டியது பற்றியதாகும். தனிப்பட்ட |
உள்ஞூராட்சிப் பிரதேசங்களை நிர்வடிப்பதற்காக |
மத்திய அரசு நிர்வாகிகளை நியமித்திருந்தமை |
இதன் மூலம் தெளிவாகின்றது. |
இவற்றிற்குப் புறம்பாக அதனைவிடக் கீழ் |
மட்டத்து நிர்வாக நடவடிக்கைகளுக்காகச் சுயேச் |
சையான சபைகள் அவ்வப் பிரதேசங்களில் |
காணப்பட்டன. இ.பி. 9 ஆம் நூற்றாண்டில் |
காணப்பட்ட கல்வெட்டுக்களில் பிரதேச |
மட்டத்தில் செயல்பட்ட சபைகள் |
“தசகம் எத்தன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. பத்துக் |
கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் |
வண்ணம் அதன் தலைவர்களைக் கொண்ட |
அச்சபை சிறிதளவு நிர்வாக விடயங்களில் |
சம்பந்தப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் |
புராதன பெளத்த விகாரையான |
களுதிய பொக்குனையில் காணப்பட்ட |
கல்வெட்டு ஒன்றில் அவ்விகாரைக்குத் தானம் வழங்குகையில் |
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பத்துக் கிராமத் |
தலைவர்களும் ஒன்றுகூடி அதனைத் தீர்த்து |
வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. |
அநுராதபுரம் இந்நாட்டின் தலைநகராகத் |
திகழ்ந்த காலத்தில் இருந்தே அரசுரிமை |
தந்தை வழிமுறையாக வந்தது. பட்டத்து |
இராணியின் பிள்ளைகளுக்கு அரசுரிமை கோரும் |
தகுதியிருந்தது. தந்தையின் பின்னர் பிள்ளைக்கு |
அரசு உரிமையாக வேண்டும் என்பது ஏற்றுக் |
கொள்ளப்பட்டிருந்தாலும் அவ்வச் சந்தர்ப்பத்தில் |
வாழ்ந்த மூத்தவருக்கு அரசுரிமை வழங்கப்பட்டது. |
தேவனம்பிய திஸ்ஸ மன்னனுக்குப் பின்னர் |
அரசுரிமை பெற்றது உத்திய, மஹாசிவ, சூரதிஸ்ஸ, |
அசேல என்ற அவரது சகோதரர்கள் நால்வராவர். |
நிர்வாகத்தில் நாட்டு மக்களுடைய நலன் |
களுக்காக நிர்வாகிகள் செயற்பட்டனர். சமய |
நிலையங்களுக்குக் கொடுப்பனவுகளை மேற்கொள்வது |
மட்டுமன்றி சாதாரண மக்களின் |
நலன்களிலும் கரிசனை செலுத்தினர். விசேடமாக, |
பொதுமக்களுக்குத் தேவையான பொதுச் |
சுகாதார வசதிகளை வழங்குவதிலும் கவனம் |
செலுத்தினர். வெஜ்ஜசாலா என்ற சொல் புராதன |
இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது வைத்திய |
சாலையைக் குறிப்பதற்காகும். வெஜ எனும் |
வைத்தியர்களைப்பற்றி கிறிஸ்துக்கு முற்பட்ட |
இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் |
கூறப்பட்டுள்ளன. புத்ததாஸ (கி.பி. 340 - 368) |
வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதில் மிகவும் |
ஆர்வம்மிக்க மன்னராவார். ஐந்தாம் மஹிந்த |
மன்னர் (கி.பி. 982 - 1029) நாடெங்கும் |
காணப்பட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவைப் |
பட்ட சகல வசஇிகளையும் வழங்கினார். நான்காம் |
காசியப்ப மன்னரின் காலத்தில் (கி.பி. 914 - |
923) அநுராதபுரத்தை அண்டிய பிரதேசங்களில் |
கடுமையான காய்ச்சல் பரவியது. அப்போது |
காணப்பட்ட சாதாரண வசதிகளுடன் கூடிய |
வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட |
நோயாளர்களைப் பராமரிப்பது சிரமம் எனக் கண்ட |
மன்னர் அதற்கெனத் தனியான வைத்தியசாலை |
ஒன்றை நிறுவியதாக வரலாற்று மூலாதாரங்கள் |
குறிப்பிடுகின்றன. ''உபசக்க ரோகநாச:' எனும் |
வார்த்தையால் இது குறிப்பிடப்பட்டுள்ளது. |
கர்ப்பிணித் தாய்மாரின் தேவைக்காகப் பிரசவ |
விடுதிகளைக் கட்டுவதற்கு முதலாம் உபதிஸ்ஸ மன்னன் |
(கி.பி.365-406) நடவடிக்கைகளை மேற்கொண்டான். |
அவ்விடுதிகள் ''பஸவந்தி |
நாம சால: எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரசவத்திற்கான |
வைத்தியசாலைகள் என்பது இதன் |
பொருளாகும். கல்வெட்டுக்களில் இக்கட்டடங்கள் |
"திம்பிரிகே'” எனக் கூறப்பட்டுள்ளன. மிகவும் |
முற்பட்ட காலங்களில் இருந்து இந்நாட்டில் தாய் |
மாருக்கான பிரசவ விடுதிகள் நிர்மாணிக்கும் |
வழக்கம் இருந்து வந்துள்ளது. |
பண்டுகாபய மன்னனின் காலத்தில் அநுராதபுரத்தில் |
““சொத்திசாலா”” எனப்பட்ட விசேட கட்டடங்கள் |
காணப்பட்டன. இச்சொல் பிராமணர்களின் |
வழிபாட்டிடத்தைக் குறித்தது. அத்துடன் பிரசவ |
விடுதியினைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் |
பட்டது என்றும் அட்டுவா நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.